உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோவையின் முதல் 4 மாடி வீடுகள்

 கோவையின் முதல் 4 மாடி வீடுகள்

அ ன்றைய கோவையில், மெத்தை வீடு கட்டிக் கொள்ள வேண்டுமென்றால் அனுமதி கிடைப்பது அரிது. மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்வதைத் தடுக்கும், இத்தகைய சட்டங்கள் ஊர் சட்டம்' என வகுக்கப்பட்டன. இரண்டடுக்கு வீடு கட்டுமானத்துக்கும், மேற்பூச்சு பூசுவதற்கும் கூட அரசின் அனுமதி தேவைப்பட்டதால், ஊரெங்கும் ஓட்டு வீடுகளே ஆதிக்கம் செலுத்தின. அனுமதி பெற்று மெத்தை வீடு கட்டியவர்கள், அந்தப் பகுதியில் செல்வந்தர்கள் என எளிதில் அடையாளம் காணப்பட்டனர். கோவை போன்ற நகரங்களிலும், ஆங்கிலேயர் வருகை தரும் வரையிலும் அரண்மனைகள், ஆலயங்கள் மட்டுமே உயர்ந்த கட்டடங்களாக இருந்தன. எங்கும் ஓட்டு வீடுகளே பொதுவானது. ஆங்கிலேயர்கள் வந்த பின்பே, மெல்ல, மெல்ல நகரத்தின் உருவம் மாறத் தொடங்கியது. 1850ம் ஆண்டு வரை, கோவையில் இருந்த மெத்தை வீடுகள் வெறும் நான்கு மட்டுமே. அவை, ராஜவீதியில் ஜாகிர்தாரரின் வீடு, வைசியாள் ஆற்காடு தொப்பையப்ப முதலியாரின் வீடு, ரங்கே கவுடர் வீதியில் ரங்கே கவுடரின் இரட்டை அடுக்கு வீடு, சுக்ரவார் பேட்டையில் லிங்கப்ப செட்டியாரின் வீடு. ஈட்டி தூண்களும், தேக்கு விட்டங்களும் கொண்டு கட்டப்பட்ட லிங்கப்ப செட்டியாரின் வீட்டில், ஒரு காலத்தில் கோவை நகர சபை பள்ளி செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்