உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலையில் பயிற்சி

வேளாண் பல்கலையில் பயிற்சி

கோவை, ;கோவை, வேளாண் பல்கலையில், விரிவாக்கக் கல்வி இயக்குநரகம், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், வேல் அமிர்தம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன சமூக கல்லூரி சார்பில், மாநில அளவிலான 'கற்பித்தல் கலை' பயிற்சிப் பட்டறை துவங்கியது.தமிழகம் முழுதும் 56 கூட்டுறவு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு நடக்கும், இந்த இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையை, பல்கலை துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன் துவக்கி வைத்தார்.தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளர் ரவிச்சந்திரன், கோவை கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அழகிரி, காந்தி கிராம பல்கலைகூட்டுறவுத் துறை பேராசிரியர் பிச்சை உட்பட பலர் பங்கேற்றனர். பயிற்சிப்பட்டறை, இன்று நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை