உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி

கோவை; 2025-2026ம் கல்வியாண்டுக்கான இரண்டாம் பருவ இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களுக்கான பயிற்சி, சித்தாபுதுார் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. மாநில அளவிலான இப்பயிற்சியில், மாவட்ட கருத்தாளர்கள் பயிற்சி அளித்தனர். ஆனைமலை, பெரியநாயக்கன்பாளையம், பேரூர் மற்றும் சர்க்கார் சாமக்குளம் உட்பட 15 ஒன்றியங்களில், 574 இல்லம் தேடி கல்வி மையங்கள் செயல்படுகின்றன. ஒன்றியத்துக்கு இருவர் வீதம் 30 பேர் பங்கேற்றனர். பயிற்சிக்கான செலவினங்களுக்காக ஒரு தன்னார்வலருக்கு தலா 200 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் முருகேசன் கூறுகையில், ''இல்லம் தேடி கல்வி கைபேசி செயலியில், மையத்துக்கு வரும் மாணவர்களின் வருகையை, மையத்தின் புகைப்படத்துடன் பதிவேற்றம் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை