உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பணி ஆய்வாளர்களுக்கு பயிற்சி

பணி ஆய்வாளர்களுக்கு பயிற்சி

மேட்டுப்பாளையம்; தமிழகம் முழுவதும் அண்மையில் 'பணி ஆய்வாளர்கள்' பணியிடம் அரசால் நிரப்பப்பட்டது. இதில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் வளர்ச்சி பணிகள், சாலை, குடிநீர் வசதி, கணினி பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையத்தில் பல நூற்றுக்கணக்கான பணி ஆய்வாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கோவை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் எழில், தலைமையில், மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா முன்னிலையில் வரைபடம் வாயிலாக பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை