உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சேர்க்கை உற்பத்தி குறித்து பயிற்சி

 சேர்க்கை உற்பத்தி குறித்து பயிற்சி

கோவை: ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரியில், 'சேர்க்கை உற்பத்தி துறையில் முன்னேற்றங்கள்' என்ற தலைப்பில், ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி, 6 நாட்கள் நடத்தப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் தொழில் துறை நிபுணர்கள் பங்கேற்றனர். சேர்க்கை உற்பத்தி தொடர்பான சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்கள், ஆராய்ச்சி போக்குகள் மற்றும் தொழிற்துறை பயன்பாடுகள் குறித்து உரைகள் மற்றும் நடைமுறை விளக்கங்கள் வழங்கப்பட்டன. கல்லுாரி இயக்குனர் மரகதம், முதல்வர் பன்சால் ராஜ்குமார், இயந்திரவியல் துறை தலைவர் சதீஷ்குமார் பங்கேற்றனர். அருள்ராஜ், சீமா, அனந்த பார்த்திபன், பிரகாஷ் பயிற்சியை ஒருங்கிணைத்தனர். 50 பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ