உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கண் தான ஆபரேஷன் செய்ய டாக்டர்களுக்கு பயிற்சி திட்டம்; கோவை இந்திய மருத்துவ சங்கம் தகவல்

கண் தான ஆபரேஷன் செய்ய டாக்டர்களுக்கு பயிற்சி திட்டம்; கோவை இந்திய மருத்துவ சங்கம் தகவல்

கோவை; கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் இந்திய மருத்துவர்கள் சங்கம் - தமிழகம் மற்றும் கோவை கிளை சார்பில், 'கண் ஒளி தானம்' என்கிற கண்தான பயிற்சி கருத்தரங்கு, கல்லுாரி அரங்கில் நேற்று நடந்தது. டீன் கீதாஞ்சலி தலைமை வகித்தார். இந்திய மருத்துவ சங்க தமிழக கிளை செயலாளர் கார்த்திக் பிரபு கூறியதாவது: இறப்பவர் அனைவரின் கண்களும் தானமாக கிடைத்தால், பார்வையற்றவர்கள் எனும் நிலையே இருக்காது. அனைவரும் கண் தானம் செய்ய முன்வர வேண்டும். மதம் சார்ந்த மூட நம்பிக்கையால் சிலர், கண் தானம் செய்ய முன்வருவதில்லை. மதத்துக்கும் கண் தானத்துக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. இறந்தவர்களிடம்இருந்து ஆறு மணி நேரத்துக்குள் கண்களை எடுத்து, பாதுகாப்பாக வைக்க வேண்டும். இந்த ஆபரேஷன், பாதுகாக்கும் செயல்பாடுகள் எளிமையானது. டாக்டர்கள் என்ற அடிப்படை தகுதியுடைய அனைவரும், பயிற்சி பெற்று இந்த ஆபரேஷன் செய்ய முடியும். கிராமப் பகுதிகளில் கண் தானம் செய்ய பலர் முன்வந்தாலும், பயிற்சி பெற்ற டாக்டர்கள் இல்லை. அதனால், ஐ.எம்.ஏ., சார்பில் பயிற்சி வழங்கியுள்ளோம்; 90டாக்டர்கள் பயிற்சி பெற்றனர். இறந்தவர்களிடம் கண் தான ஆபரேஷன் செய்வதற்கான பயிற்சி பாடத்திட்டத்தை, ஆர்வமுள்ள அனைத்து டாக்டர்களுக்கும், விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார். கருத்தரங்கில், அரசு மருத்துவக்கல்லுாரி துணை முதல்வர் சுஜாதா,கண் மருத்துவ பிரிவு துறைத்தலைவர் சாந்தி, ஐ.எம்.ஏ.மாநில தலைவர் செங்குட்டுவன், கோவை கிளை தலைவர் மகேஷ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை