உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரி பேராசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை

கல்லுாரி பேராசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை

கோவை : மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, பி.எஸ்.ஜி., புத்தாக்க மற்றும் தொழில்முனைவோர் மையம் சார்பில், கல்லுாரி பேராசிரியர்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி பட்டறையாக, ஜூன் 11ம் தேதி முதல் 24ம் தேதி வரை, பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது. ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து இருவர் பங்கேற்கலாம்.இந்தியாவிலுள்ள புதுமை மற்றும் தொழில்முனைவோர் சூழல், தொழில் வாய்ப்புகள் மற்றும் சிந்தனை வடிவமைப்பு, வணிக மாதிரி வடிவமைப்பு, நிதி ஆதரவு திட்டங்கள் ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன; 50 பேருக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.வெளியூர் ஆசிரியர்களுக்காக, விடுதி வசதி உண்டு. பயிற்சி கட்டணம் இல்லை. பதிவுக் கட்டணமாக ரூ.590 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். விபரங்களுக்கு: 97888 24318, 73394 47364.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ