உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ‘லீவு’ எடுக்க அதிகாரிகளை கவணிக்கனுமாம் புலம்பும் போக்குவரத்துக்கழக பணியாளர்கள்

‘லீவு’ எடுக்க அதிகாரிகளை கவணிக்கனுமாம் புலம்பும் போக்குவரத்துக்கழக பணியாளர்கள்

கோவை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை மண்டலத்தில் 17 ‘டிப்போ’க்கள் உள்ளன. ஒவ்வொரு டிப்போவிலும் 70–100 பஸ்கள் பராமரிக்கப்படுகின்றன. ஓட்டுனர், நடத்துனர் தவிர, டயர், மெக்கானிக்கல் என பஸ் பராமரிப்பு தொழில்நுட்ப பணியாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். ஓய்வு காரணமாக காலிப்பணியிடங்கள் அதிகரித்து பணிச்சுமை கூடியுள்ளதாக பணியாளர்கள் புலம்புகின்றனர். காலிப்பணியிடத்தை காரணம் காட்டி அவசர காலத்தில் கூட விடுப்பு வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனர். ‘தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு என ஆண்டுக்கு 60 விடுப்புகள் உள்ளன. மாதம் குறைந்தது நான்கு நாட்கள் விடுப்பு எடுக்கலாம். ஆனால், ஆள் பற்றாக்குறை காரணளாக ‘டிப்போ’ அதிகாரிகள் தர மறுக்கின்றனர். ஏற்கனவே, தொழில்நுட்ப பணியாளர் ஒருவர், இருவர் பார்க்க வேண்டிய வேலையை செய்கிறார். கூடுதல் பணிச்சுமையால் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுகிறது. மருத்துவ சிகிச்சை உட்பட அவசர காலங்களில் கூட நான்கு நாட்களுக்குமேல் விடுப்பு எடுக்க வேண்டும் என்றால் தலைமை அலுவலகம் சென்று உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற அதிகாரிகள் மிரட்டுகின்றனர். பண்டிகை காலத்தில் பயணிகள் நலன் கருதி விடுப்பு எடுப்பதை தவிர்க்கிறோம். மற்ற நாட்களில் எங்களுக்கான விடுப்பை தராமல் அதிகாரிகள் மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். விடுப்பு முறையாக வழங்குவதுடன், வேலை வாய்ப்பு அலுவலகம் வாயிலாக ஆட்கள் எடுத்து எங்களது கூடுதல் பணிச்சுமையை குறைக்க வேண்டும்’ என்கின்றனர், தொழில்நுட்ப பணியாளர்கள். உத்தரவு இல்லை! மாதம் நான்கு நாட்களுக்கு மேல் விடுப்பு எடுக்கக்கூடாது என்று ஏதேனும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதா என்று கோவை கோட்ட தலைமையக பொதுத் தகவல் அதிகாரியிடம் ஆர்.டி.ஐ. வாயிலாக ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ‘உத்தரவு ஏதும் பிறக்கப்படவில்லை’ என்று பதில் தரப்பட்டுள்ளதை பாதிக்கப்பட்ட பணியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ