உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாதை தெளிவானால் பயணம் எளிதாகும்! மேற்குப்புறவழிச்சாலை பணி 43 சதவீதம் நிறைவு

பாதை தெளிவானால் பயணம் எளிதாகும்! மேற்குப்புறவழிச்சாலை பணி 43 சதவீதம் நிறைவு

கோவை: கோவை மேற்குப்புறவழிச்சாலை முதல் 'பேக்கேஜ்' திட்டத்தில், இதுவரை, 43 சதவீத பணிகள் முடிந்துள்ளன. 2025 ஆக., மாதத்துக்குள் முழுமையாக முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.கோவை நகர்ப்பகுதியில் ஏற்படும் வாகன போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண, புறநகரில் சுற்றுவட்டச்சாலை ஏற்படுத்தும் விதமாக, மேற்குப்புறவழிச்சாலை மற்றும் கிழக்கு புறவழிச்சாலை திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.அதில், மேற்குப்புறவழிச்சாலை என்பது பாலக்காடு ரோட்டில் மதுக்கரை அருகே மைல்கல் பகுதியில் துவங்கி, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் முடிகிறது; 32.43 கி.மீ., துாரத்துக்கு, 15 வருவாய் கிராமங்கள் வழியாக அமைக்கப்படுகிறது.கிழக்குப்புறவழிச்சாலை திட்டத்துக்கு இன்னும் மத்திய அரசு அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

மூன்று பேக்கேஜ்

மேற்குப்புறவழிச்சாலை திட்டத்துக்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, மூன்று 'பேக்கேஜ்'களாக பிரித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.n முதல் 'பேக்கேஜ்' 11.80 கி.மீ., துாரம். இதில், 4 கி.மீ., துாரத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி முடிந்து விட்டது; மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை, 43 சதவீத பணிகள் முடிந்துள்ளன. வரும், 2025 ஆக., 9ம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.n இரண்டாவது 'பேக்கேஜ்' 12.10 கி.மீ., மூன்றாவது 'பேக்கேஜ்' 8.52 கி.மீ., துாரம். இதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணியில், மாநில நெடுஞ்சாலைத்துறையில் உருவாக்கியுள்ள நில எடுப்பு பிரிவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது 'பேக்கேஜ்'க்கு நிலம் கையகப்படுத்த ரூ.111.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம், 54.45 ஹெக்டேர் நிலம் தேவை; இதில், அரசு நிலம் 16.75 ஹெக்டேர்; தனியார் நிலம் 37.70 ஹெக்டேர். இதுவரை, 25.90 ஹெக்டேர் நிலம் எடுக்கப்பட்டுள்ளது. 40 பாலங்கள் மற்றும் சிறுபாலங்கள், 3 இடங்களில் சுரங்கப்பாதையுடன் நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.330 கோடி மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருக்கிறது. நிதி ஒதுக்கக்கோரி, நிதித்துறைக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.n மூன்றாவது 'பேக்கேஜ்'க்கு தேவையான நிலம் கையகப்படுத்த ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 34.30 ஹெக்டேர் நிலத்துக்கு மதிப்பு நிர்ணயம் செய்யும் பணி நடக்கிறது. இந்நிதியாண்டுக்குள் நிலம் கையகப்படுத்தும் பணியை முடிக்க, மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. மூன்றாவது பேக்கேஜில் 24 பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள், 2 வாகன சுரங்கப்பாதையுடன் நான்கு வழிச்சாலை ஏற்படுத்த ரூ.220 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு, 2025-26 நிதியாண்டில் நிர்வாக அனுமதி பெற்று, செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை, மாநில நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சத்தியப்பிரகாஷ் ஆய்வு செய்தார். ரோட்டை 'கட்' செய்து, எவ்வளது உயரத்துக்கு தார் ரோடு போடப்பட்டிருக்கிறது; நீளத்தை அளந்து சரிபார்த்தார். தரத்தை ஆய்வுக்கு உட்படுத்தினார். கான்கிரீட் கட்டுமானங்கள் தரமாக இருக்கிறதா என சரிபார்த்தார்.இலக்கை எட்ட வேகம்மாதம்பட்டி, மைல்கல் ஆகிய இடங்களில் பாலங்கள் கட்ட வேண்டும். மாதம்பட்டியில்,40 சதவீத பணி முடிந்து விட்டது. மைல்கல் பகுதியில் பாலம் அமைக்க, 52 'கர்டர்' தேவை; 32 'கர்டர்' தயாராகி விட்டது. இப்பணி முடிந்து விட்டதால், துாண் கட்டி, துாக்கி வைத்து விடலாம். திட்ட காலத்துக்கு முடிக்கும் வகையில் வேகப்படுத்தப்பட்டு உள்ளது.- மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை