உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / படியில் தொங்கியபடி பயணம்; தனியார் பஸ் பறிமுதல்

படியில் தொங்கியபடி பயணம்; தனியார் பஸ் பறிமுதல்

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்த தனியார் பஸ்ஸை, வட்டார போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்தார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளியங்காடு செல்லும் மூன்றாம் எண் கொண்ட தனியார் பஸ், நேற்று முன்தினம் காரமடையை கடந்து வெள்ளியங்காடு செல்லும் போது, அதிக அளவில் பயணிகளை ஏற்றி கொண்டு சென்றது.மேலும், அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் படியில் தொங்கியபடி பயணம் செய்த நிலையில், அது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதையடுத்து, மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் சத்தியக்குமார், சம்பந்தப்பட்ட பஸ்ஸை நேற்று பறிமுதல் செய்தார்.மேலும் மாணவர்களை படியில் தொங்கியபடி பயணம் செய்ய அனுமதித்த பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரையும் பொள்ளாச்சியில் செயல்படும் அரசு போக்குவரத்து புத்தாக்க பயிற்சி பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.--------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ