உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாதுகாப்பு வழங்க கோரி த.வெ.க. ஆர்ப்பாட்டம்

பாதுகாப்பு வழங்க கோரி த.வெ.க. ஆர்ப்பாட்டம்

வால்பாறை,; வால்பாறை அடுத்துள்ள வேவர்லி எஸ்டேட் பகுதியில், 8 வயது சிறுவன் வனவிலங்கு தாக்கி உயிரிழந்தார். இதனையடுத்து வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி, த.வெ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வால்பாறை போஸ்ட் ஆபீஸ் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் நகர செயலாளர் ஆண்ட்ரூஸ் தலைமை வகித்தார். இணை செயலாளர் சையதுஅலி, பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், வனவிலங்குகளிடம் இருந்து மக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை. வனவிலங்குகள் தாக்கி குழந்தைகள் இறக்கும் நிலையில் தொழிற்சங்க தலைவர்களை தட்டிக்கேட்கவில்லை. வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்தால் வனத்துறை சார்பில் வழங்கப்படும் நிவாரணத்தொகை உயர்த்தி வழங்க வேண்டும். தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதியில், போதிய பாதுகாப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என, கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ., ஸ்ரீதரன், த.வெ.க. மகளிர் அணி அமைப்பாளர்கள் ஏஞ்சல், சங்கீதா, மகளிர் அணி செயலாளர் ஆனந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி