உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கலெக்டர் அலுவலகத்தில் கருவூலத்துறை ஆண்டு ஆய்வு

கலெக்டர் அலுவலகத்தில் கருவூலத்துறை ஆண்டு ஆய்வு

கோவை; கலெக்டர் அலுவலகத்தில் கோவை மண்டலத்துக்குட்பட்ட கருவூலம் மற்றும் கணக்குத்துறை அலுவலகங்களின் ஆண்டு ஆய்வுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், மாநில கணக்காயரின் ஆண்டு ஆய்வில் குறிப்பிட்டுள்ள தணிக்கை குறைகளை களைவு செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக துரித நடவடிக்கை மேற்கொண்டு முழுமையான பதிலை உடனே சமர்ப்பிக்குமாறும் கருவூல அலுவலர்கள் மற்றும் உதவிக் கருவூல அலுவலர்களுக்கு கருவூலம் மற்றும் கணக்குத்துறை கூடுதல் இயக்குநர் (திட்டங்கள்) சந்திரன் அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கருவூலம்) ராஜகோபால், கோவை மண்டல இணை இயக்குநர் பாலமுருகன், மாவட்ட கருவூல அலுவலர் குமரேசன், கோவை மண்டலத்திற்குட்பட்ட நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த கருவூல அலுவலர்கள், உதவி கருவூல அலுவலர்கள் பங்கேற்றனர். மாநிலக்கணக்காயர் அலுவலக முதுநிலைகணக்கு அலுவலர்கள் மல்லேஸ்வரன், விஐயலட்சுமி ஆகியோருக்கு, கருவூலம் மற்றும் கணக்குத்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி