மேலும் செய்திகள்
ஆபத்தான நிலையில் மரம்வெட்டி அகற்ற கோரிக்கை
01-Apr-2025
பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட தனலட்சுமி நகரில் மரம் சாய்ந்து வீட்டின் முன்பக்கம் சேதமானது.நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட, 12வது வார்டு, தனலட்சுமி நகரில் பேரூராட்சிக்கு சொந்தமான ரோட்டில், கரையான்களால் அரிக்கப்பட்ட மே பிளவர் மரம் நீண்ட காலமாக இருந்தது. மரம் எப்போது வேண்டுமானாலும், வேருடன் சாயும் நிலையில் இருந்ததால், அப்பகுதி பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பேரூராட்சி அலுவலருக்கு புகார் கொடுத்தனர். கிராம நிர்வாக அலுவலரும் மரத்தை அகற்ற பேரூராட்சி நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார். ஆனாலும், மரம் வெட்டி அகற்றப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை, 11:00 மணிக்கு மே ப்ளவர் மரம் வேரோடு சாய்ந்து, அப்பகுதியில் வசிக்கும் ரங்கநாதன் வீட்டு முன்புறம் சாய்ந்தது. இதில், அவருடைய வீட்டின் முன் பக்க ஷெட்டு சேதமானது. சம்பவ இடத்துக்கு வந்த நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி ஊழியர்கள், மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,' மரம் சாயும்போது அதிர்ஷ்டவசமாக ரோட்டில் வாகனங்களோ, ஆட்கள் நடமாட்டமோ இல்லை. இதனால் உயிர் சேதம் ஏற்படவில்லை. மரத்தால் ஏற்பட்ட சேதத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என்றனர்.
01-Apr-2025