உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று வழங்கல்

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்று வழங்கல்

பொள்ளாச்சி; பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக, கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி நகர பா.ஜ. மற்றும் இளைஞரணி சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச சேலை, மரக்கன்றுகள் வழங்குதல், மாற்று கட்சியினர் இணைதல் என, முப்பெரும் விழா நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரசேகர், பொதுச்செயலாளர் துரை, துணை தலைவர் சாந்தி, நகர தலைவர் கோகுல்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமை வகித்து பேசுகையில், ''முதல்வராக இருந்த போதும், பிரதமராக இருந்த போதும், விடுமுறை எடுக்காமல் மோடி பணியாற்றி வருகிறார்,'' என்றார். கூட்டத்தில், பெண்களுக்கு சேலைகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் பரமகுரு, மாவட்ட இளைஞரணி தலைவர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை