உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மரங்கள் வெட்டி சாய்ப்பு; இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி

மரங்கள் வெட்டி சாய்ப்பு; இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி

பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதால் இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட தனலட்சுமி நகரில் சாலையோரம் வளர்ந்திருந்த நிழல் தரும் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், 'பல ஆண்டு காலமாக இப்பகுதியில் நிழல் தரும் ஏராளமான மரங்கள் இருந்தன. நேற்று முன்தினம் மின்சார ஒயர்கள் மரக்கிளைகளில் பட்டு மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக கூறி, மரங்களை வெட்டி சாய்த்தனர். மின்சார ஒயர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் குறிப்பிட்ட மர கிளைகளை மட்டும் வெட்டுவதற்கு பதிலாக, மொத்தமாக மரங்களை வெட்டி சாய்த்து உள்ளனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் இதுவரை நிலவி வந்த குளுமையான சூழல் மாறி, வெப்பம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது' என்றனர்.இது குறித்து, நரசிம்மநாயக்கன்பாளையம் வி.ஏ.ஓ., விஜயன் கூறுகையில், மரங்களை வெட்ட யாரும் உரிய அனுமதி பெறவில்லை. இது குறித்தான அறிக்கை, கோவை வடக்கு தாசில்தாருக்கு அனுப்பப்பட்டு, உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி