உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மொபைல் கோர்ட்டில் விசாரணை பாதிப்பு; மாஜிஸ்திரேட் நியமிக்க எதிர்பார்ப்பு

மொபைல் கோர்ட்டில் விசாரணை பாதிப்பு; மாஜிஸ்திரேட் நியமிக்க எதிர்பார்ப்பு

கோவை; கோவை மொபைல் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் பணியிடம் காலியாக இருப்பதால், விசாரணை பாதிக்கப்படுகிறது.கோவை மாநகர பகுதிகளில், சாலை போக்குவரத்து விதிகளை மீறுவோர், அதி வேகமாக வாகனம் ஓட்டுவோரை கண்காணித்து, அபராதம் விதிக்க போக்குவரத்து போலீசார் ஈடுபடுகின்றனர். போக்குவரத்து விதி மீறுவோருக்கு, போலீசாரால் விதிக்கப்படும் அபராத தொகை, ஆன்லைன் மற்றும் கோர்ட் வாயிலாக வசூலிக்கப்படுகிறது.கோவை புறநகர் பகுதி நெடுஞ்சாலைகளில், போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுவோரை பிடித்து, அந்த இடத்திலேயே உடனடி அபராதம் வசூலிப்பதற்காக, 'மொபைல் கோர்ட்' செயல்படுகிறது.இதற்காக தனியாக மாஜிஸ்திரேட் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புறநகர் பகுதி நெடுஞ்சாலைகளில், தினசரி சாலையோரத்தில் மொபைல் கோர்ட் வாகனம் நிறுத்தப்பட்டு, போலீசார் உதவியுடன், விசாரணை நடத்தப்படுகிறது.மொபைல் கோர்ட் மாஜிஸ்திரேட் பணியிடம் பல மாதங்களாக காலியாக இருப்பதால், கோவை, ஜே.எம்:1, மாஜிஸ்திரேட்டிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.பொறுப்பு மாஜிஸ்திரேட் இரண்டு கோர்ட்டிலும் பணியாற்ற வேண்டியிருப்பதால், மொபைல் கோர்ட்டில் தினசரி விசாரணை நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.வாரத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே, மொபைல் கோர்ட் செயல்பட நேரம் கிடைக்கிறது. மொபைல் கோர்ட்டிற்கு மாஜிஸ்திரேட் நிரந்தரமாக நியமிக்கப்படும் பட்சத்தில், ரெகுலராக விசாரணை நடத்த முடியும். இதனால், அதிவேக வாகன ஓட்டிகளால் ஏற்படும் விபத்துக்களை ஓரளவு தடுக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை