உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கூட்டுறவு அலுவலர்களுக்கான விளையாட்டு திறமை காண்பித்தவர்களுக்கு கோப்பை

 கூட்டுறவு அலுவலர்களுக்கான விளையாட்டு திறமை காண்பித்தவர்களுக்கு கோப்பை

கோவை: சர்வதேச கூட்டுறவு ஆண்டு மற்றும் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு, கூட்டுறவு துறை அலுவலர்கள் மற்றும் சங்கப் பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள், சாய்பாபா காலனி ராமலிங்க செட்டியார் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்தன. கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி, பொள்ளாச்சி சரக துணைப்பதிவாளர் வடிவேல், கோவை சரக துணைப்பதிவாளர் தினேஷ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், மகளிருக்கான எறிபந்து, 100 மீ., 200 மீ., குண்டு எறிதல், சதுரங்கம், கயிறு இழுத்தல், ஆண்களுக்கு 100 மீ., 200 மீ., குண்டு எறிதல், கிரிக்கெட், கயிறு இழுத்தல், கபடி, கையுந்து பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கூட்டுறவுத் துறை அலுவலர்கள், சங்கப் பணியாளர்கள் பங்கேற்றனர். ஆண்களுக்கான, 40 வயதுக்கு உட்பட்டோர் 100 மீ., ஓட்டத்தில், ஜெயேந்திரா, ஹரிஹரன், 40 வயதுக்கு மேற்பட்டோர் 100 மீ., ஓட்டத்தில் நந்தகுமார், பழனிசாமி, 40 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 200 மீ.,ல் ஜெயந்திரன், கவின் ஆகியோர் முதல் இரு இடங்களை பிடித்தனர். பெண்களுக்கான, 40 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், 100 மீ., ஓட்டத்தில் நந்தகுமாரி வெற்றி பெற்றார். 40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் 100 மீ., ஓட்டத்தில் பூங்கொடி, கஜலட்சுமி, 40 வயதுக்கு உட்பட்டோர் 200 மீ., பிரிவில் உமாதேவி, சிந்து பிரியா, 40 வயதுக்கு உட்பட்டோர் 100 மீ.,ல், உமத், சிந்து பிரியா, 40 வயதுக்கு மேற்பட்டோர் 200 மீ.,ல் பூங்கொடி, சூர்யா ஆகியோர் வெற்றி பெற்றனர். கபடி, கைப்பந்து போட்டிகளில் கோவை அணி வெற்றி பெற்றது. வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்