உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முற்றுகை போராட்டம் நடத்த த.வெ.க., முடிவு

முற்றுகை போராட்டம் நடத்த த.வெ.க., முடிவு

வால்பாறை,; வால்பாறை நகர த.வெ.க., நிர்வாகிகள் கூட்டம் செயலாளர் ஆண்ட்ரூஸ் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு நகர இணை செயலாளர் சையதுஅலி, நகர பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வால்பாறை நகராட்சியில் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. குறிப்பாக, ரோடு, தடுப்புச்சுவர், நடைபாதை, கால்வாய், சீரமைக்கப்படாத விளையாட்டு மைதானம் உள்ளிட்ட எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. வளர்ச்சி பணிகளில் அக்கறை காட்டாத நகராட்சி கவுன்சிலர்களை கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், இளைஞரணி அமைப்பாளர் ரியாஸ், மகளிர் அணி அமைப்பாளர்கள் ஏஞ்சல், சங்கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை