உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லிப்ட் பராமரிக்காத இருவர் கைது

லிப்ட் பராமரிக்காத இருவர் கைது

கோவை; இரும்பு கம்பி அறுந்து 'லிப்ட்' விழுந்து தொழிலாளி பலியான வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். கோவை ரங்கே கவுடர் வீதியில், சிகரெட் மொத்த விற்பனை கடையில் இரும்பு கம்பி அறுந்து லிப்ட் விழுந்தது. இதில் கடையில் பணிபுரிந்து வந்த விருதுநகர் மாவட்டம், திருச்சுளியை சேர்ந்த சுரேஷ், 36 பலியானார். சுரேஷின் மனைவி, முருகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், கடைவீதி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். லிப்ட் முறையாக பராமரிக்கப்படவில்லை எனத் தெரிந்தது. கடை உரிமையாளர் கோவை லாரி பேட்டையை சேர்ந்த முகமது தவ்பிக், 33, குனியமுத்துார் இடையர்பாளையம் மெயின் ரோட்டை சேர்ந்த ஜஹாங்கீர், 52 ஆகியோரை கைது செய்த போலீசார், பிணையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி