கஞ்சா பதுக்கிய இருவர் கைது
வால்பாறை: வால்பாறையில் கஞ்சா பதுக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்ட ரூரல் எஸ்.பி., உத்தரவின் பேரில், வால்பாறை இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில், பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை வந்த அரசு பஸ்சை திடீர் சோதனை செய்தனர்.அப்போது, கோவை மதுக்கரையை சேர்ந்த ரீத்தீஸ், 22, என்பவர், 100 கிராம் கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது.தற்போது, பழைய வால்பாறை எஸ்டேட் உறவினர் வீட்டில் தங்கி, நகரில் உள்ள பர்னிச்சர் கடையில் பணிபுரிந்து வருகிறார்.அவர் கொடுத்த தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் கார்த்திக், மணிகண்டன், சேவியர், வேல் ஆகியோர் , கோவை எட்டிமடை பகுதியைச்சேர்ந்த ராஜேஸ், 21 என்பவரை பிடித்து, அவரிடம் கால் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து, 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.