மேலும் செய்திகள்
ரயிலில் கஞ்சா கடத்திய அசாம் பெண்கள் கைது
24-Jan-2025
கோவை. : ரயிலில் கஞ்சா கடத்தி வந்த இருவரை, போலீசார் சிறையில் அடைத்தனர். கோவை ரயில்வே ஸ்டேஷனில், வடமாநிலங்களில் இருந்து ரயில்கள் வாயிலாக கஞ்சா கடத்தல் குறித்து, போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் அசாம் மாநிலம் திப்ருகரிலில் இருந்து, கன்னியாகுமரி செல்லும் ரயில் வந்தது.அதில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இருந்த இருவரிடம், போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில், அவர்கள் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது.அவர்களை கைது செய்த போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் மணிப்பூர் மாநிலம், தொபாலை சேர்ந்த நவுசத்கான், 22, முகமது முஜிபூர் ரகுமான், 27 எனத் தெரிந்தது. இருவரையும் சிறையில் அடைத்த போலீசார், இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.சமீபகாலமாக, வடமாநிலங்களில் இருந்து ரயில் வாயிலாக, கஞ்சா கடத்தி வருவது அதிகரித்துள்ளதால், போலீசார் சோதனையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
24-Jan-2025