கஞ்சா பயன்படுத்திய இருவர் கைது
கோவை; துடியலுார் போலீசார் வட்டமலையாம்பாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள காலி இடத்தில், இருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் அமர்ந்திருந்தனர். அவர்களை பிடித்த போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் கஞ்சா பயன்படுத்தியது தெரிந்தது. விசாரணையில், அவர்கள் விருதுநகர் தோப்பூரை சேர்ந்த சங்கர் தயாள் சர்மா, 23, கோபிசெட்டிபாளையம் துரைசாமிபாளையத்தை சேர்ந்த சுகன்ராஜ், 23 எனத் தெரிந்தது. இருவரும் துடியலுார் பகுதியில், தங்கி பணிபுரிந்து வந்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், பிணையில் விடுவித்தனர். அவர்களுக்கு எங்கிருந்து கஞ்சா கிடைத்தது என்பது குறித்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.