உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதல்வர் குறித்து தவறாக பேசியதாக இரு பா.ஜ., நிர்வாகிகளுக்கு சிறை

முதல்வர் குறித்து தவறாக பேசியதாக இரு பா.ஜ., நிர்வாகிகளுக்கு சிறை

கோவை; தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து தவறாக பேசியதாக, பா.ஜ., நிர்வாகிகள் இருவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். டாஸ்மாக் ஊழலை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில், அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை, போலீசார் கைது செய்து, வழக்கு பதிவு செய்து பின்னர் விடுவித்தனர். இந்நிலையில், செல்வபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரில், பா.ஜ., ஆலயம் மற்றும் ஆன்மிகம் மண்டல் தலைவர் துரை, 43 மற்றும் துணை தலைவர் மணிவண்ணன் ஆகியோர், தமிழக முதல்வர் குறித்து கொச்சையாக பேசியதாக, செல்வபுரம் போலீசார், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை