உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சன்சைடு இடிந்து விழுந்து சிறுவர்கள் இருவர் பலி

சன்சைடு இடிந்து விழுந்து சிறுவர்கள் இருவர் பலி

பாலக்காடு: வீட்டின் 'சன்சைடு' இடிந்து விழுந்த விபத்தில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்தனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி, கருவார என்ற இடத்தை சேர்ந்த அஜய்-, தேவி தம்பதியரின் மகன்கள் ஆதி 7, அஜ்னேஷ் 4. ஆதி, அருகில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், இவர்களது தோழி அபிநயாவுடன் 6, நேற்று மாலை வீடு அருகே உள்ள பழுதடைந்து பயனற்று கிடக்கும் வீட்டின் 'சன்சைடு' மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென 'சன்சைட்' இடிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த மூவரையும், கோட்டத்துறை பகுதியில் உள்ள அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆதியும், அஜ்னேஷும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை