உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதையில் தகராறு: இருவர் காயம் 

போதையில் தகராறு: இருவர் காயம் 

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, குடிபோதையில் ஏற்பட்ட பிரச்னையில் இருவரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி, கோபாலபுரம் அருகே வண்ணாமடை பகுதியை சேர்ந்த, அருண்பிரசாத், 25, சேது, 26, பழனிசாமி, 32, பூபதி, 34 மற்றும் நந்தகோபாலன், 26, ஆகியோருக்கு இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டது.அதில், அருண்பிரசாத், கத்திரிக்கோலால் நந்தகோபாலை தாக்கினார்; நந்த கோபால், அரிவாளால் தாக்கினார். அதில், இருவரும் காயமடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இப்பிரச்னை தொடர்பாக, பழனிசாமி, பூபதியை தாலுகா போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ