கஞ்சா விற்பனை இருவருக்கு சிறை
கோவை; கோவை செல்வபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கன்னிமார்கோவில் பின்புறம், சந்தேகத்துக்கு இடமான வகையில் இருவர் நின்றிருந்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தனர். விசாரணையில், அவர்கள் கோவைபுதுாரை சேர்ந்த பிரசன்னகுமார், 19 மற்றும் 18 வயது சிறுவன் எனத் தெரிந்தது. பிரசன்னகுமாரை சிறையில் அடைத்த போலீசார், சிறுவனை சிறார் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர். அவர்களிடம் இருந்து, 1.170 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.* பீளமேடு போலீசார் டைடல் பார்க் ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, பீளமேடு, தண்ணீர் பந்தலை சேர்ந்த ரஞ்சித், 24 என்பவரை சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து, 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.