உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தவறி விழுந்து இருவர் பலி

 தவறி விழுந்து இருவர் பலி

கோவை: கே.என்.ஜி.புதுாரை சேர்ந்தவர் சங்கர், 75. ரத்தினபுரியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இல்லத்தின் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார். அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பின் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு உயிரிழந்தார். கவுண்டம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர். * பன்னிமடையை சேர்ந்தவர் பிரஷாந்த், 33; கட்டடத் தொழிலாளி. கட்டுமானப்பணியை முடித்து விட்டு கீழே வரும் போது மரப்படிக்கட்டு உடைந்து தவறி விழுந்தார். தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். துடியலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை