மேலும் செய்திகள்
வெவ்வேறு இடங்களில் கார்கள் மோதி இருவர் பலி
06-Jan-2025
சூலுார்; கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக், 38. தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று பைக்கில் சூலுாரில் இருந்து வீட்டுக்கு சென்றார். அப்போது, பின்னால் வந்த லாரி மோதியது. பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.காரமடையை சேர்ந்தவர் விஷ்ணு ராகவன், 19. இவர் சென்னப் செட்டி புதூர் அருகே பைக்கில் நேற்று மதியம் சென்ற போது, அவ்வழியே வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
06-Jan-2025