மேலும் செய்திகள்
நீதிமன்றத்தில் ஆஜராகாத வாலிபருக்கு சிறை
03-Jul-2025
பொள்ளாச்சி; ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இருவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார், கடந்த, 2022ம் ஆண்டு ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில், திண்டுக்கல்லை சேர்ந்த, கோவை மதுக்கரை, பி.கே.புதுாரில் வசிக்கும் பாண்டி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவை குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்,4ல் நடக்கிறது. இவ்வழக்கு விசாரணைக்கு பாண்டி ஆஜராகாமல் இருந்தார். கடந்த, 21ம் தேதி குற்றம் சாட்டப்பட்ட பாண்டி, நீதிமன்றத்தில் நேரிலோ, வக்கீல் வாயிலாகாவோ ஆஜராகும்படி குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இதுபோன்று கடந்த, 2014ம் ஆண்டு ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த பிரபு மீதான வழக்கு, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்,4 ல் நடக்கிறது. இவ்வழக்கில், அவர் ஆஜராகாமல் இருந்தார். கடந்த மாதம், 13ம் தேதி நீதிமன்றத்தில் நேரடியாகவோ, வக்கீல் வாயிலாகவோ ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். பொள்ளாச்சி குடிமைப்பொருள் போலீசார், சம்மன் வழங்க சம்பந்தப்பட்ட முகவரிக்கு சென்ற போது, அவர்கள் அங்கு வசிக்கவில்லை. அவர்கள் குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர்களிடம் சான்றிதழ் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு குறித்து அறிவிப்பு செய்தும், தவறும் பட்சத்தில், பாண்டி, பிரபு இவரையும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
03-Jul-2025