மேலும் செய்திகள்
ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த இருவர் கைது
18-Oct-2024
கோவை: பெரியகடை வீதி போலீசார் உக்கடம், ஜி.எம்.நகர், ரமலான் வீதி சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்துள்ளன.காரில் இருந்த ஏழு பேர், இறங்கி ஓட்டம் பிடித்தனர். போலீசார் அவர்களை துரத்தி பிடிக்க முயன்ற போது, இருவர் சிக்கினர். விசாரணையில், பிடிபட்டவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாதவன், 42, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சிவசுப்ரமணியன், 38 என்பதும், தப்பியது குமார், சதீஷ், ஜோஸ், ஸ்ரீஜித், ரத்துன் என்பதும் தெரிந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தப்பிய ஐந்து பேரை தேடி வருகின்றனர்.
18-Oct-2024