உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மூடப்படாத தண்ணீர் தொட்டி; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

 மூடப்படாத தண்ணீர் தொட்டி; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

தண்ணீர் தொட்டி மூடப்படுமா? கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பெரியார் நகரில், தண்ணீர் தொட்டி மேல் பகுதி திறந்த நிலையில் உள்ளது. மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் இங்கு செல்வதால், மாணவர்கள் பாதுகாப்பு கருதி தொட்டியின் மேல் பகுதியை மூடுவதற்கு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -- ராஜ்: சேதமடைந்த போர்வெல் நெகமம், சிறுகளந்தையில் ரோட்டோரம் உள்ள போர்வெல் சேதமடைந்து உபயோகம் இல்லாமல் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய சிரமம் ஏற்படலாம். ஊராட்சி நிர்வாகம் சார்பில் போர்வெல்லை விரைவில் சரி செய்ய வேண்டும். - மணிகண்டன்: மழை நீர் தேங்குது! கிணத்துக்கடவு, வடசித்தூர் ரவுண்டானா அருகே ரோட்டோரம் மழை நீர் தேங்குகிறது. இதனால், அவ்வழியாக நடந்து செல்பவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி ரோட்டோரம் மழை நீர் தேங்குவதை தடுக்க மணல் கொட்டி பள்ளங்களை சீரமைக்க வேண்டும். - ராம்குமார்: தெருவிளக்கு எரியல! பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட, 7வது வார்டில் தனியார் விடுதி செல்லும் ரோட்டில் தெருவிளக்குகள் கடந்த இரண்டு மாதங்களாக எரிவதில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தெருவிளக்குகளை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். - மனோகரன்: சுற்றுச்சுவர் இல்லை உடுமலை ராமசாமி நகர் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், வளாகச்சுவர் இல்லாமல் காணப்படுகிறது. இதனால், அங்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. எனவே, அங்கு சுற்றுச்சுவர் கட்ட சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - சிவப்பிரகாசம்: வடிகால் அமைக்கணும் வெஞ்சமடை வாய்க்கால் பாலம் அருகே, தேசிய நெடுஞ்சாலை அருகே மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. எனவே, தேங்கியுள்ள மழைநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கணேசன்: துார்வார வேண்டும் உடுமலை பஸ் ஸ்டாண்டில், ஆனைமலை பஸ்கள் நிற்குமிடத்தில் சாக்கடை துார்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாக்கடையை துார்வார நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கருப்பணன்: மழை நீர் தேக்கம் உடுமலை ஸ்ரீநகர் - பழநி ரோடு சந்திப்பில் தரைமட்டப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலம் உயரமாக உள்ளதால், மழைநீர் கீழிறங்கி தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, இதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும். - கோபால்: நிழற்கூரை பராமரிப்பு இல்லை உடுமலை அருகே பொட்டி நாயக்கனுார் கிராம பஸ் ஸ்டாப் நிழற்கூரை பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் இதை பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் நிழற்கூரையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - வேலன்: வறண்ட குளம் உடுமலை அருகே முக்கோணம் கிராம குளத்திற்கான நீர்வரத்து கால்வாய் துாவாரப்படாததால், மழை காலத்தில் குளம் வறண்டு காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கால்வாயை துார்வார பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - குமார்: ரோட்டில் கழிவு நீர் பொள்ளாச்சி - - பல்லடம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே, ரோட்டோரத்தில் பல மாதங்களாக கழிவுநீர் வழிந்தோடியபடி உள்ளது. இதனால், ரோட்டோரப் பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று வரும் மக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் ரோட்டில் செல்லாதவாறு நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கவுரி சங்கர்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி