உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தடையின்றி குடிநீர் வினியோகம்; பேரூராட்சிகளுக்கு அறிவுறுத்தல்

தடையின்றி குடிநீர் வினியோகம்; பேரூராட்சிகளுக்கு அறிவுறுத்தல்

- நமது நிருபர் -பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் தலைமையில், திருப்பூர் மாவட்ட பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் உதவி இளநிலை பொறியாளர்கள் மட்டத்தில் நடந்த கூட்டத்தில், உதவி இயக்குனர் சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டன.'முதல்வரின் முகவரி' திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, பதில் அளிக்கப்படும் போது, உரிய சரியான விபரங்களை வழங்க வேண்டும்.பேரூராட்சி பகுதிகளில் அமைந்துள்ள பூங்காக்கள், கழிப்பறை, வடிகால், பஸ் ஸ்டாண்ட் ஆகியவை தினசரி சுத்தம் செய்யப்படுவதை, பேரூராட்சி செயல் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.உரப் பூங்காவில் சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரித்து, தயாரிக்கப்படும் உரம் இருப்பு குறித்த விபரங்களை தயார் செய்ய வேண்டும். வட கிழக்குப்பருவ மழையின் போது, பேரூராட்சிகளின் செயல் அலுவலர், தலைமையிடத்திலேயே தங்கி, பணிகளை மேற்கொள்ள வேண்டும்.தேங்கும் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கு, தயார் நிலையில் மோட்டார் வைத்திருக்க வேண்டும். வெள்ள நீர் வெளியேற்றப்பட்ட பின், நோய் பரவாமல் இருக்க பேரூராட்சி பகுதிகளில், அனைத்து பகுதிகளுக்கும் பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும்.மழைக்காலம் துவங்கும் முன், சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக, பேரிடர் மேலாண்மை பொருட்கள் மற்றும் பணியாளர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.அனைத்து பகுதிகளுக்கும், சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறதா என்பதை தினசரி கண்காணிக்க வேண்டும்.குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டால், அதை சரி செய்யும் வரை, அப்பகுதிகளில், குடிநீர் தங்கு, தடையின்றி வழங்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு, அறிவுரைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை