உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆர்.சி., இன்றி வாகனங்கள் அடமானம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ஆர்.சி., இன்றி வாகனங்கள் அடமானம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பொள்ளாச்சி : 'பொள்ளாச்சியில், ஆர்.சி., புத்தகம் இல்லாமல், வாகனங்கள் அடமானம் வாங்குவது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, பொள்ளாச்சி வாகன பைனான்ஸ் அசோசியேஷன் சார்பில், ஏ.எஸ்.பி., சிருஷ்டி சிங்கிடம் மனு கொடுத்து வலியுறுத்தினர்.மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சியில், 100க்கும் மேற்பட்ட வாகன நிதி நிறுவனங்கள் உள்ளன. தற்போது, பைனான்ஸ் பெறப்பட்ட இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை, அவற்றின் உரிமையாளர்கள் வேறு நபர்களிடம் ஆர்.சி., புத்தகம் இல்லாமல் அடமானம் வைத்து பணம் பெறுகின்றனர்.பொள்ளாச்சியில், ஆர்.சி., புத்தகம் இல்லாமல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அடமானம் வைத்துள்ளனர். அதில், திப்பம்பட்டியில் மட்டும், 25 வாகனங்கள் கண்டறிந்து மீட்கப்பட்டது. இவர்களை போன்று, கூளநாயக்கன்பட்டி, ஆனைமலை, பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த சிலர், சட்டவிரோதமாக வாகனங்களை அடமானம் வாங்கி, அதை சட்ட விரோத செயல்களுக்காக வாடகை விட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், வாகனங்களை திரும்ப பெறாத அளவுக்கு அதிக வட்டி கேட்கின்றனர். இந்த காரணத்தால், நிதி நிறுவனங்கள் தொழில் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும், அதிக அடமான தொகைக்காக உடுமலை, பிற பகுதிகளுக்கு வாகனங்களை மாற்றிவிடுகின்றனர். அடமானம் வாங்கும் வாகனங்கள், உடுமலையை சேர்ந்த ஒருவர் வாயிலாக, பழநி, திண்டுக்கல், தேனி, திருச்சி மற்றும் பிற பகுதிகளுக்கு சட்ட விரோதமாக அரிசி கடத்தல், திருட்டு சம்பவங்கள், வழிப்பறி, கஞ்சா கடத்தல் போன்ற செயல்களுக்கு வாடகை விடப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை