அரசு மருத்துவமனையில் பாலித்தீன் பயன்பாடு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், தினமும், அதிகப்படியான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அவ்வாறு, மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு, உடன் தங்குபவர்கள் மற்றும் உறவினர்கள், உணவு மற்றும் பழங்களை, பிளாஸ்டிக் கவர்களில் வாங்கி வருகின்றனர்.உணவுகளை உண்ட பின், இலை மற்றும் பழத்தோல் ஆகியவற்றை, பிளாஸ்டிக் கவர்களில் வைத்து, மருதுவமனை வளாகத்துக்கு உள்ளேயே விட்டுச் செல்கின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.மருத்துவமனை ஊழியர்கள், உள்நோயாளிகளைக் காண வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை பரிசோதித்து அனுப்பினாலும், பாலித்தீன் கவர் பயன்பாடு அதிகரிக்கிறது. துாய்மைப் பணியாளர்கள், அவ்வபோது பாலித்தீன் கவர்களை அகற்றினாலும் அத்துமீறலுக்கு கடிவாளம் போடுவது அவசியம். அப்போது தான் பொதுச்சுகாதாரத்தை பாதுகாக்க முடியும்.