உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மண்புழு உரத்தை பயன்படுத்துங்க!

மண்புழு உரத்தை பயன்படுத்துங்க!

கிணத்துக்கடவு; விவசாயத்தில், அதிகளவு மண் புழு உரத்தை பயன்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு வேளாண் பேராசிரியர் மணிவண்ணன் தெரிவித்தார்.கிணத்துக்கடவு வட்டாரத்தில், 16 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமாக விவசாய பரப்பு உள்ளது. இதில், அதிகப்படியான விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் பயிர்களுக்கு அனைத்து சத்துக்களும் கிடைக்காது. குறிப்பிட்ட சத்துக்கள் மட்டுமே கிடைக்கும்.இதை தவிர்த்து, மண் புழு உரத்தை விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்த வேண்டும். மண்புழு உரத்தில், தழைச்சத்து, மணிச்சத்து உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளது.இதை உபயோகிப்பதால், ரசாயன உரத்தைக் காட்டிலும், கூடுதலான சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்கிறது. இத்துடன் அதிக மகசூலும் கிடைக்கிறது. எனவே, விவசாயத்தில் மண்புழு உரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும், என, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் மணிவண்ணன் ஆலோசனை வழங்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை