கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்
கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு, அரசம்பாளையம் பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.கிணத்துக்கடவு, அரசம்பாளையத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் அரசம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் உள்ள மக்கள், தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த அழைத்து வந்தனர்.முகாமில், 200க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், 4 முதல் 6 மாத கன்றுகளுக்கு பூஸ்டர் ஊசி செலுத்தப்பட்டது. முகாமில், நோய் நிகழ்வியல் அலுவலர் (சென்னை) டாக்டர் கனக சுகிலா, கோவை கால்நடை நோய் புலனாய்வுத்துறை உதவி இயக்குனர் கீதா, பனப்பட்டி கால்நடை உதவி மருத்துவர் பரமேஸ்வரன் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பங்கேற்றனர்.