உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வடவள்ளி கிராம சபை 12ம் தேதி கூடுகிறது

 வடவள்ளி கிராம சபை 12ம் தேதி கூடுகிறது

அன்னூர்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், 2024 ஏப். 1 முதல் 2025 மார்ச் 31 முடிய, செய்யப்பட்ட பணிகளை அளவீடு செய்தல், தணிக்கை செய்தல் ஆகிய பணிகள் வடவள்ளி ஊராட்சியில் நேற்று துவங்கியது. வட்டார வள அலுவலர் கார்த்திக் ராஜா தலைமையில் தணிக்கையாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். வருகிற 11ம் தேதி வரை இப்பணி நடைபெறுகிறது. இதையடுத்து வரும், 12ம் தேதி காலை 11:00 மணிக்கு, வடவள்ளி ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. 'வடவள்ளி ஊராட்சி மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கலாம்' என, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ