உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி

 பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி

நெகமம்: நெகமம், காட்டம்பட்டிபுதூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், வரும் 30ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடக்கிறது. நெகமம் அடுத்துள்ள, காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டம்பட்டிபுதூரில் உள்ள, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வரும், 30ம் தேதியன்று, அதிகாலை 5:00 மணிக்கு, பரமபத வாசல் (சொர்க்க வாசல்) திறப்பு நிகழ்வு நடக்கிறது. இதை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கிறது. அதன்பின், பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஏகாதசி விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ