உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பழ, வாசனை பயிர் மதிப்புக்கூட்டல் அவசியம்; சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம்

பழ, வாசனை பயிர் மதிப்புக்கூட்டல் அவசியம்; சாகுபடி தொழில்நுட்ப கருத்தரங்கம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பில், பழ, வாசனை பயிர்கள் சாகுபடி தொழில்நுட்பம் குறித்து மாவட்ட அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம், பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நேற்று துவங்கியது.தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சித்தார்த்தன் வரவேற்றார். சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா பேசினார்.பெங்களூரு இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி கருணாகரன், வளர்ந்தோங்கி வரும் மதிப்புள்ள பழப்பயிர்கள் சாகுபடி தொழில்நுட்பம் குறித்தும், மண் வளம், சீதோஷ்ண நிலை குறித்து விளக்கினார்.மா, வாழை சாகுபடி உயர் தொழில்நுட்பங்கள் குறித்து, கோவை வேளாண் பல்கலை பேராசிரியர் கவிநொ; ஜாதிக்காய், மிளகு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் (தோட்டக்கலை) ராஜலிங்கம்; கோவை கரும்பு இனப்பெருக்க கழகம் பயிர்பாதுகாப்பு துறை ஓய்வு பெற்ற தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வேளாண்மையில் நுண்ணுயிர்களின் பங்கு குறித்து பேசினர்.வாழையில் மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றி, முன்னோடி விவசாயிகளின் அனுபவ பகிர்வு குறித்து பேசினர். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வசுமதி நன்றி கூறினார்.தொடர்ந்து, தோட்டக்கலைத்துறை சார்பில், பழம் மற்றும் வாசனை பயிர்கள் குறித்து கண்காட்சி நடத்தப்பட்டது. இதை சப் - கலெக்டர் மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) மல்லிகா ஆகியோர் பார்வையிட்டனர்.ஒவ்வொரு ஸ்டால்களுக்காக சென்று பயிர்கள் குறித்து கேட்டறிந்தனர். நீரா மற்றும் வாழை ஜீஸ் போன்றவை வழங்கப்பட்டது.தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பழவகை சாகுபடி மற்றும் வாசனை பயிர்கள் குறித்து கருத்தரங்கம் நடந்தது. அதில், மா, வாழை, பலா சாகுபடி முறைகள், நோய் மேலாண்மை, களை எடுத்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. மேலும், டிராகன் பழம், மங்குஸ்தான், ரம்புட்டான், அவகோடா உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.வாசனை பயிர்களான ஜாதிக்காய், குருமிளகு, பட்டை சாகுபடி, மண் வளம் பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கப்பட்டன.மேலும், கண்காட்சி வாயிலாக பழம், வாசனை பயிர்கள், தென்னையில் நோய் தாக்குதல் கட்டுப்படுத்தும் முறைகள், தேனில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து விளக்கப்பட்டது.தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், காய்கறி பயிர்கள், மா, பப்பாளி, கொய்யா, எலுமிச்சை, பலா, பேரீச்சை, உதிர் மலர்கள் சாகுபடிக்கு வழங்கப்படும் மானியம், மானாவாரி வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத்தில், கறவை மாடு, காய்கறி விதைகள், பழக்கன்றுகள் தொகுப்பு, தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் உற்பத்திக்கான மானியம் வழங்குதல் குறித்து விளக்கப்பட்டன.தொடர்ந்து, இன்று, தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடியில் பயிர் மேலாண்மை, பயிர் பாதுகாப்பு மற்றும் மண் வளம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. வயல் பார்வையிடல் மற்றும் செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி