உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்களுக்கு உதவ வானவில் மையம் துவக்கம்

பெண்களுக்கு உதவ வானவில் மையம் துவக்கம்

அன்னுார்; சிறுமியர் மற்றும் பெண்களுக்கு உதவ, வானவில் பாலின வள மையம் அன்னுாரில் துவக்கப்பட்டது.பெண் குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் போது, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க அச்சமடைந்து, தவறுகளை மறைக்கின்றனர். அவர்களின் அச்சத்தை போக்க, ஒவ்வொரு வட்டாரத்திலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வானவில் மையம் அமைக்கப்படுகிறது. நடப்பாண்டு, கோவை மாவட்டத்தில், அன்னுார், ஆனைமலை, சூலூர் ஆகிய இடங்களில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் படுக்கைகள், சமையலறை, டிவி, நூலகம் ஆகியவை ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைந்துள்ளன.ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிச்சாமி இம்மையத்தை துவக்கி வைத்தார்.மகளிர் திட்ட மேலாளர் கந்தசாமி பேசுகையில், இந்த மையத்தில் பெண் காவலர் மற்றும் மனநல ஆலோசகர் உள்ளனர். 24 மணி நேரமும் இந்த மையத்தை சிறுமியர் மற்றும் பெண்கள் தொடர்பு கொள்ளலாம். உரிய ஆலோசனைகள் வழங்கப்படும் 04254 - 298581 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார்.நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கரி, ஒன்றிய கவுன்சிலர்கள் சின்னான், சுமதி, இந்திராணி மற்றும் சுய உதவி குழு கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி