உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒருவழிப்பாதையில் பறக்கும் வாகனங்கள்; நோயாளிகள் அச்சம்

ஒருவழிப்பாதையில் பறக்கும் வாகனங்கள்; நோயாளிகள் அச்சம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, தலைமை அரசு மருத்துவமனையின் எதிரே ஒரு வழிப்பாதையில் படுவேகமாக செல்லும் வாகனங்களால், நோயாளிகள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர். பொள்ளாச்சி நகரில், உடுமலை ரோட்டில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனைக்கு தினமும், அதிகப்படியான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளை பார்ப்பதற்காக பிற பகுதிகளில் இருந்து குடும்பத்தினர், உறவினர்கள் வந்து செல்கின்றனர். இதனால், மருத்துவமனை வளாகம், எப்போதும் பரப்பரப்புடன் காணப்படும். மருத்துவமனை நுழைவுவாயில் அருகில், அதிகப்படியான ஆக்கிரமிப்புகள் காணப்படுகின்றன. நடைபாதையை ஆக்கிரமித்து, தள்ளுவண்டிக் கடைகளை நிறுத்தி வியாபாரம் செய்கின்றனர்; ரோட்டை ஒட்டி வாகனங்களும் நிறுத்தப்படுகிறது. தவிர, கடைவீதி வழியாக செல்ல முற்படும் இலகு ரக வாகனங்கள், அங்கு, திரும்பி செல்வதற்காக திடீரென நிறுத்தப்படுவதால், விபத்து அபாயம் அதிகரிக்கிறது. கடைவீதியில் இருந்து உடுமலை நோக்கி செல்லும் இலகுரக வாகன ஓட்டுநர்கள் ரவுண்டானா வழியாக திருப்பாமல், ஒரு வழிப்பதையில் வேகமாக செல்வதால், விபத்து அபாயம் அதிகரிக்கிறது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. நோயாளிகள் அழைத்து வரப்படும் ஆம்புலன்ஸ்கள், மருத்துவமனை வளாகத்திற்குள் விரைந்து செல்ல முடிவதில்லை. மக்கள் கூறுகையில், 'மருத்துவமனை எதிரே உள்ள வழித்தடத்தில் செல்ல முற்படும் வாகனங்களால், நெரிசல் ஏற்படுகிறது. அங்கு, நோயாளிகள், ரோட்டை கடக்க முடியாமல் திணறுகின்றனர். குறிப்பாக, ஒரு வழிப்பாதையில் இயக்கப்படும் வாகன ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை