உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலை மலைப்பாதையில் நாளை முதல் வாகனங்களுக்கு தடை

மருதமலை மலைப்பாதையில் நாளை முதல் வாகனங்களுக்கு தடை

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில், நாளை (பிப்.,20) முதல் ஏப்.,6 வரை, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல, கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. கோவிலில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கோவிலில், வரும், ஏப்., 4ம் தேதி, கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது.இந்நிலையில், கும்பாபிஷேக பணிகள் விரைவாக முடிக்க வேண்டிய காரணத்தால், நாளை (பிப்.,20) முதல் ஏப்., 6ம் தேதி வரை, மலைக்கோவிலுக்கு, பக்தர்கள், நான்கு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை. நாளை (பிப்.,20) முதல் ஏப்., 6ம் தேதி வரை உள்ள செவ்வாய்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாட்களில், இருசக்கர வாகனங்களும் மலை மேல் செல்ல அனுமதி இல்லை.பக்தர்கள், படிக்கட்டு பாதை வழியாகவும், திருக்கோவில் பஸ் வாயிலாகவும் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை