உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மருதமலை மலைப்பாதையில் இன்று வாகனங்கள் செல்ல தடை

 மருதமலை மலைப்பாதையில் இன்று வாகனங்கள் செல்ல தடை

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் மலைப்பாதையில், இன்று இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல, கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆங்கில புத்தாண்டு தினமான இன்று, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குடும்பத்துடன் வருவார்கள் என எதிர்பார்ப்பதால், பக்தர்களின் வசதிக்காக பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், மலைப்பாதையில் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும், பக்தர்களின் வசதிக்காகவும், இன்று ஒரு நாள் மட்டும், மருதமலை மலைப்பாதை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. பக்தர்கள் படிக்கட்டு பாதை வழியாகவும், கோயில் பஸ் மூலமாகவும் மலைமேல் உள்ள கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என, கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி