உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெள்ளியங்காடு அரசு பள்ளி சாதனை

வெள்ளியங்காடு அரசு பள்ளி சாதனை

மேட்டுப்பாளையம் : காரமடை அருகே வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெற்று மாணவ, மாணவிகள் சாதனை புரிந்துள்ளனர். மொத்தம்138 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 137மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். ஸ்ரீ விஷ்னு சஞ்சய் 479 மதிப்பெண் பெற்று முதலிடமும், கவுசல்யா 469 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், பிரியதர்ஷினி 468 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர். ஸ்ரீ விஷ்ணு சஞ்சய் மற்றும் தட்சனி ஆகியோர் சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களில் 45 மாணவர்கள் 400க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியர் சாக்ரடீஸ் குலசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் ராம்தாஸ் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பேபி ஆகியோர் பாராட்டினர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ