காட்டு யானை பிரச்னைக்கு தீர்வு காண கலெக்டரிடம் வேலுமணி முறையீடு
கோவை; 'வனப்பகுதியில் இருந்து வெளியேறி, ஊருக்குள் வரும் காட்டு யானைகளிடம் இருந்து மக்களை காப்பாற்றுங்கள்' என,கலெக்டரிடம், முன்னாள் அமைச்சர் வேலுமணி முறையிட்டார். அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனையில், இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளாததால்,மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். கோவை மாநகராட்சியில் சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புக்கான வைப்புத்தொகை, பல மடங்கு உயர்த்திய சூழலில், மீண்டும் கட்டண உயர்வுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை, ரத்து செய்ய வேண்டும். வெள்ளலூர் குப்பை கிடங்கை சுற்றி, 15 கி.மீ. சுற்றளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. வெளிமாவட்ட குப்பையும் கொட்டப்படுகின்றன; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. காட்டு யானைகள் குடியிருப்புக்குள்நடைபயிற்சி மேற்கொள்கிறது. மக்கள் நடமாட முடியவில்லை. இதற்கு தீர்வு காண வேண்டும். சென்னை ஐகோர்ட்நியமித்தகுழு, வரும் 5ல்வருகிறது. ஆய்வுக்குழுவிடம் மாவட்ட நிர்வாகம் எடுத்துக் கூறி, உருக்கு கம்பி வேலி அமைக்க வேண்டும். வெள்ளலுார் ஒருங்கிணைந்த பஸ் நிலைய கட்டுமான பணிகளை, மீண்டும் துவங்கி விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். அதன்பின், நரசீபுரம் பகுதியில் காட்டு யானைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி, கோவை வடக்கு தி.மு.க. மாவட்டதலைவர் ரவி, கலெக்டரிடம் மனு கொடுத்தார்.