உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வேட்டைக்கார அப்புச்சி கோவில் கும்பாபிஷேகம்

 வேட்டைக்கார அப்புச்சி கோவில் கும்பாபிஷேகம்

நெகமம்: நெகமம், கொண்டேகவுண்டன்பாளையம் வேட்டைக்கார அப்புச்சி கோவிலில், வரும், 30ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. நெகமம், கொண்டேகவுண்டன்பாளையத்தில் உள்ள வேட்டைக்கார அப்புச்சி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள், வரும், 29ம் தேதி துவங்குகிறது. இதில், மதியம் 1:00 மணிக்கு, தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து வரப்படுகிறது. மாலை 5:00 மணிக்கு, மங்கள இசை, விநாயகர் பூஜை, மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, முதல்கால ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு, அஷ்டபந்தன மருந்து சாற்றப்படுகிறது. வரும், 30ம் தேதி, காலை 6:00 மணிக்கு, இரண்டாம் கால ஹோமம், நாடி சந்தானம், தீபாராதனை நடக்கிறது. காலை 8:30 மணிக்கு, கோபுர கலசம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. காலை 10:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜைகள், தச தரிசனம், தீபாராதனை மற்றும் மங்கள ஆரத்தி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ