மாணவியரின் வீடியோ பதிவு; ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு
போத்தனுார்; அரசு பள்ளி ஆசிரியர் மீது மாணவியர் பாலியல் புகார் கூறி வெளியான வீடியோ அடிப்படையில், இரு ஆசிரியர்கள் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மூன்று மாணவியர், ஆசிரியர் இருவர் மீது பாலியல் சீண்டல் புகார் கூறிய வீடியோ பதிவு மூன்று நாட்களுக்கு முன் வெளியானது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4i0466gs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து போலீசார், மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் பள்ளியில், 10, பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் 287 மாணவியரிடம் தனித்தனியே விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றனர். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஹப்ஸா, மாணவிகள் குறித்து வெளியான வீடியோவின் உண்மை தன்மையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு புகார் கொடுத்தார். இந்நிலையில், போலீசார் வீடியோவில் பெயர் குறிப்பிடப்பட்ட இரு ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.