பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, புளியம்பட்டி பி.ஏ. கல்வி நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள வித்யா விநாயகர் கோவில் கும்பாபி ேஷக விழா இன்று துவங்குகிறது.காலை, 9:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு ேஹாம பூஜைகள், தீபாராதனை நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பிரவேசம், யாக பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து, வள்ளி கும்மியாட்டம் நடக்கிறது. வரும், 22ம் தேதி காலை, 8:30 மணிக்கு ேஹாம பூஜைகள், மாலையில் கணபதி பூஜை, பிரசாத கால பூஜைகள் நடக்கிறது.வரும், 23ம் தேதி காலை, 6:00 மணிக்கு லட்சுமி கணபதி பூஜை, நாடிசந்தானம், பரிவார சுவாமிக்கு பூர்ணாஹுதி, காலை, 9:30 மணிக்கு யாத்ரதானம், கடம் புறப்பாடு, காலை, 10:00 மணிக்கு விமான கும்பாபிேஷகம், விநாயகர் சுவாமிக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிேஷகம், மஹா அபிேஷகம் நடக்கிறது.