மேலும் செய்திகள்
ஆசிரியர் தின விழா; பள்ளிகளில் கொண்டாட்டம்
05-Sep-2025
கோவை : விஜயதசமியை முன்னிட்டு புதிய மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், தங்கள் பகுதியில் உள்ள பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிந்து சேர்க்கவும், கோவை பீளமேடு மாநகராட்சி ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள், விழிப்புணர்வு பேரணி நடத்தினர். ஜெகநாதபுரம், ஏ.டி. காலனி உள்ளிட்ட வீதிகளில் நடைபெற்றது. ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று, மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் விதம், வழங்கப்படும் சத்துணவு திட்டம் மற்றும் பள்ளியின் இதர செயல்பாடுகள் குறித்து, பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைமையாசிரியை சகுந்தலா கூறுகையில், ''மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தரமான கல்வி மற்றும் அரசின் நலத்திட்டங்களை கூறினோம். தொடர் முயற்சியால், இதுவரை 95 குழந்தைகளை சேர்த்துள்ளோம். 150 ஆக உயர்த்தும் இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்,'' என்றார்.
05-Sep-2025