உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பெருமாள் கோவில்களில் விஷ்ணுபதி புண்யகால பூஜை

 பெருமாள் கோவில்களில் விஷ்ணுபதி புண்யகால பூஜை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், விஷ்ணுபதி புண்யகால பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விஷ்ணுபதி புண்ய காலத்தில் மஹாவிஷ்ணுவையும், மஹாலட்சுமியையும் மனதார வழிபட்டு எல்லா தேவைகளையும், வேண்டுதல்களையும் கூறி பிரார்த்தனை புரியலாம். பூமிக்கு அதிபதியான பூதேவி தாயாரை அந்த நாளில் நடக்கும் மகா பூஜையில் பங்கேற்று வழிபட்டால் நிலம், வீடு வாங்க தாயாரின் அருள் பெற முடியும் என்பது ஐதீகம். பொள்ளாச்சி கடைவீதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், மஹா விஷ்ணுபதி புண்ணிய கால பூஜையை முன்னிட்டு நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு பெருமாளுக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, காலை, 5:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம ேஹாமம், பஞ்ச சூக்த ேஹாமம், அஷ்டலட்சுமி ேஹாமங்கள் நடைபெற்றன.பக்தர்கள், கொடிமர நமஸ்காரம் செய்து, பூக்களை கையில் வைத்துக்கொண்டு, 27 முறை பிரகார வலம் வந்து ஒவ்வொரு சுற்றுக்கும், ஒரு பூவை கொடி மரத்துக்கு முன் வைத்து வழிபாடு செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜையில், எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயரமான், அறங்காவலர் குழு தலைவர் மணி, அறங்காவலர்கள், கோவில் நிர்வாகத்தினர் பங்கேற்றனர். * டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.அதிகாலை, 4:45 மணியில் இருந்து மதியம், 12:00 மணி வரையிலும், மாலை, 5:40 மணி முதல், இரவு, 7:40 மணி வரையிலும் பிரகாரத்தை பக்தர்கள் வலம் வந்து வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி